இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எல்லாவற்றிலும் ஐசுவரியமுள்ளவராய் இருப்பதை விட பரிசுத்த தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் இருக்கிறார் என்பதை காட்டிலும் வேறொன்றையும் நான் நினைத்து பார்க்கமுடியாது . எனது தோல்விகள், குறைகள், பாவங்கள், அக்கிரமங்கள் ஆகியவற்றை நான் அறிவேன். அவருடைய கிருபையினாலே நம்மை மன்னிக்க முதலாவது இயேசுவை அனுப்பாதிருந்தாலும், அவருடைய இரக்கத்தினாலே நம்மை இரட்சிக்காதிருந்தாலும் , நான் என்றோ தேவனற்றவனாகி தொலைந்திருப்பேன். இப்போது, ​​அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் இருப்பதால் , என் வாழ்க்கை இயேசுவின் எதிர்காலத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. நான் சுயமாய் ஒன்றையும் எனக்காக செய்துகொள்ள முடியாது .

என்னுடைய ஜெபம்

எல்லா இரக்கமும் , கிருபையுமுள்ள பிதாவே உமக்கு நன்றி. நீர் எங்கள் தேவனாயிருப்பதற்காக நன்றி. எனக்கு தகுதியில்லாத போதும் உம் இரக்கத்தை அதிகமாக தந்ததற்காக நன்றி. எனக்கு மிகவும் தேவைப்படும் போதும் உம் இரக்கத்தை பொழிந்ததற்காக நன்றி. என் வாழ்க்கை அழிந்து போய்விட்டது, நம்பிக்கையற்றது என்று நினைக்கும் வேளைகளில் ஜீவன் கொடுத்ததற்காக நன்றி. பணம் மற்றும் பொன்னை காட்டிலும் உமது இரக்கம் மற்றும் கிருபை எனது சம்பத்தாய் இருக்கட்டும். உம்மை போல இருக்க எனக்கு உதவியருளும் . என் மூத்த சகோதரரும் இரட்சகருமாகிய இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து