இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சில விஷயங்கள் மிகவும் சிக்கலானவை அல்ல. இயேசுவுக்காக வாழ்வதை இரண்டு கொள்கைகளாகக் வகையறுக்கலாம். நாம் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும் மற்றும் நமக்கு உள்ள அனைத்தையும் கொண்டு தேவனை அன்புக்கூரவேண்டும் , அது போல மற்றவர்களையும் அன்புக்கூரவேண்டும் , நாம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோமோ அது போல மற்றவர்களையும் நடத்த வேண்டும் . இவைகளை புரிந்துகொள்வது கடினம் அல்ல. அப்படி வாழ்வதுதான் சவால் என்று நான் நினைக்கிறேன்!

என்னுடைய ஜெபம்

ஜீவனுள்ள மெய் தேவனே,என் கைகளின் வேலையையும், என் வாயின் வார்த்தைகளையும், என் ஓய்வின் தருணங்களையும், என் இதயத்தின் அன்பையும் இன்று உமக்கு என் ஆராதனையாக செலுத்துவதை ஏற்றுக்கொள்ளும். இவை உமக்கு மகிழ்ச்சியாகவும், சுகந்தவாசனையாகவும் இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன் . உமது குமாரனும் , எனது கர்த்தருமாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து