இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் உண்மையுள்ளவர், அவருடைய உடன்படிக்கை அன்பின் உடன்படிக்கையாகும் . அவர் நம்மைக் கைவிட மாட்டார், அன்பான பெற்றோர் ஒரு கீழ்படியாத பிள்ளைக்கு தகுதி இல்லாவிட்டாலும், அந்த மகனையோ அல்லது மகளையோ சிறப்பாக நடத்துவது போல, நம் பிதா நம்முடைய தகுதிக்கு மேலாய் நம்மை சிறப்பாக வழி நடத்துவார். ஒரு நன்மையை கொண்டு வருகிறதான அல்லது நம் பரபரப்பான வாழ்க்கையில் வாரத்திற்கு ஒரு முறை வரும் விருந்தினராக அல்ல, நம் இருதயங்களில் எப்போதும் நம் தேவனாகிய கர்த்தரே தேவன் என்று கனம்பண்ணவேண்டும் . நாம் என்ன செய்கிறோமோ அது அவருடைய பார்வையில் செய்யப்படுகிறது, அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை என்ற விழிப்புடன் எப்பொழுதும் செய்யப்பட வேண்டும்!

என்னுடைய ஜெபம்

உண்மையுள்ள தேவனே , என்னை உள்ளத்தின் ஆழத்திலிருந்தும், உறுதியாகவும் நேசித்ததற்காக உமக்கு நன்றி. இஸ்ரவேலர்களுக்கு நீர் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றியதற்கும், நீர் வாக்களித்தபடியே இயேசுவை அழைத்து வந்ததற்கும் உமக்கு நன்றி. என்னை உம் வீட்டிற்கு அழைத்து வர அவரைத் திருப்பி அனுப்புவதாக நீர் கொடுத்த வாக்குறுதியை நான் விசுவாசிக்கிறேன். என்னோடும் நான் நேசிப்பவர்களோடும் நீர் செய்த அன்பின் உடன்படிக்கைக்காக எனது நன்றியாக என் நற்கிரியையும், வார்த்தைகளையும் இன்று பெற்றுக்கொள்ளுங்கள். உம் அன்பின் ஈவான இயேசுவின் நாமத்திலே , நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து