இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, வேதாகமம் எதையும் மறைத்து வைக்காமல் துல்லியமாகவும் தெளிவாகவும் சத்தியத்தை வெளிப்படுத்துகிறது , சிலவேளைகளில் அப்படி கூறுவது நம்மை நோகசெய்கிறது ! இந்த அண்ட சராசரமும் மற்றும் அதிலுள்ள இந்த சிறிய நீல கிரகம் ( பூமியும் ) நீண்ட காலமாக இருக்கிறதாக நாம் கருதுகிறோம். இது இன்னும் அநேக வருஷங்கள் இங்கே இருக்கும் என்று சில சமயங்களில் நாம் கருதுகிறோம். ஆனால் அது தற்காலிகமானது என்று தேவன் நமக்கு நினைப்பூட்டுகிறார்! நாம், இங்கே தற்காலிகமானவர்கள்: ஈக்களைப் போலவே, நாம் சிறிது நேரம் இங்கே இருக்கிறோம், பின்னர் நாம் கடந்துப்போவோம் . ஆனால் முற்றிலுமாக போகவில்லை,முடிந்துவிடவில்லை ! கிறிஸ்தவர்கள் பூமியின் தற்காலிமான இந்த தேகத்தை விட்டுச் பிரிந்து சென்றுவிட்டனர், ஏனென்றால் நம் வாழ்வு கிறிஸ்துவுடன் என்றென்றும் நிலைத்திருக்கும் தேவனின் இரட்சிப்பில் பிணைக்கப்பட்டுள்ளது . தேவனுடைய நீதி ஒருபோதும் முடிவடையாது அல்லது ஒழிந்துப்போகாது . நம் இரட்சிப்பு ஒவ்வொரு புதிய நாளையும் கடந்து நீடிக்கும்!

என்னுடைய ஜெபம்

நீதியுள்ள பிதாவே , என் விண்ணப்பத்தின் சத்தத்தைக் கேட்டு, என் ஆத்தும பயணத்திற்காக என்னைப் பெலப்படுத்தும். ஒரு கிறிஸ்தவனாக உம்முடன் இருப்பது மரணத்தின் எல்லைகளையும், என் மனிதாபிமானத்தின் வரம்புகளையும், எனது பலவீனங்களின் பாதிப்புகளையும் தாண்டிச் செல்கிறது என்ற உறுதிக்காக உமக்கு நன்றி. நான் உம்முடனும் உம் இரட்சிப்புடனும் பிணைக்கப்பட்டுள்ளதற்கும், இயேசுவின் மூலம் நீர் என்னை உம் நீதியுள்ள மற்றும் பரிசுத்த பிள்ளையாகப் பார்க்கிறீர் என்பதற்காகவும் உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து