இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆஹா! என்ன ஒரு செய்தி. நம் வாழ்வில் நாம் பலனளிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். உலக அறிவை விட இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே அதிகமாக வளர வேண்டும் என்று அவர் விரும்புகிறார், அதை நம் வாழ்வில் செயல்படுத்தவும், அதனுடன் பயனுள்ளதாகவும், பலனளிக்கிறதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால் என்னைப் பொறுத்தவரை, நான் கொஞ்சம் முயற்சி செய்து விசுவாசம், தைரியம், ஞானம், இச்சையடக்கம்,பொறுமை, தேவபக்தி , சகோதர சிநேகம் , அன்பு ஆகிய இந்த குணங்களில் வளர முயற்சிக்க வேண்டும் என்று பேதுரு கூறுகிறார், "தேவ ஜனமாகிய , நாம் அதைப் பின்பற்றி நம் வாழ்க்கையில் கனிதருகிறவார்களாக மாறவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்!" நான் ஆயத்தமாக உள்ளேன் ! இன்றே பின்பற்றலாமா .

என்னுடைய ஜெபம்

பரிசுத்த தேவனே, உமது கிருபையில் வளர நான் முயற்சி செய்கிறேன். தயவு செய்து எனது முயற்சிகளை ஆசீர்வதித்து, நான் அன்பற்றவனாக இருந்தபோது என்னை நேசித்ததற்காகவும், நான் தொலைந்து போனபோது என்னை மீட்டெடுத்ததற்காகவும் என் முழு மனதோடு ஸ்தோத்திரங்களை தெரிவிக்கிறேன் . நான் ஜெபிக்கிற இயேசுவோடு என் வாழ்க்கையில் உமது மகிமைக்காக பலன் கொடுக்க விரும்புகிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து

Important Announcement! Soon posting comments below will be done using Disqus (not facebook). — Learn More About This Change