இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"மறுரூபப்படுகிறோம் ... மகிமையின்மேல் மகிமையடைந்து ." வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது ஒரு தொடர்ச்சியாக நடக்கும் செயல்முறை. இந்த சத்தியத்தின் மேன்மை என்னவென்றால், பரிசுத்த ஆவியானவரின் தொடர்ச்சியான உதவியால், நாம் நமது இலக்கை அடையப் போகிறோம் - ஆவியானவர் நம்மை மென்மேலும் இயேசுவைப் போல மறுரூபமாகும்படி செய்கிறார் ! நாம் நம் பயணத்தை ஒருபோதும் கைவிடக் கூடாது என்பதே இந்த செய்தியாகும் . நாம் இயேசுவையே நோக்கி பார்த்து, அவருடைய குணாதிசயம் , இரக்கம், அன்பு, பரிசுத்தம் ஆகியவற்றை நம் வாழ்க்கையிலே பிரதிபலிக்க வேண்டும், அதே நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் செய்து தேவனின் கிரியையை நடப்பிக்கிறார் என்று நம்புகிறோம், மேலும் நம்மை ஒவ்வொரு நாளும் இயேசுவைப் போல மறுரூபமாகும்படி செய்கிறார் .

என்னுடைய ஜெபம்

பிதாவே , நான் என் நம்பிக்கையிலே போதும் என்கிற மனநிலையை அடைய அனுமதித்த நேரங்களுக்காக அடியேனை மன்னித்தருளும், மேலும் நான் இயேசுவின் மீது என்னுடைய முழு கவனத்தையும் செலுத்தவில்லை. எனது திட்டங்களில், குறிப்பாக எனது ஆவிக்குரிய முதிர்ச்சியடைய நான் அதிக நோக்கத்துடன் இருக்க முயற்சிக்கும்போது தயவுசெய்து என்னை ஆசீர்வதித்தருளும் . தயவு செய்து ஒவ்வொரு நாளும் என்னை இயேசுவைப் போல் மறுரூபமாக்குங்கள். நான் மேலும் இயேசுவைப் போல என்னை வடிவமைத்துக்கொள்ள என்னையே முற்றிலுமாய் உமக்கு சமர்ப்பிக்கிறேன். அவருடைய நாமத்தினாலே, நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து