இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மன்னிப்பு ! என்ன ஒரு மதுரமான, விலையேறபெற்ற ஈவு . நாம் சரிசெய்யவோ, ஈடுசெய்யவோ அல்லது செலுத்தவோ பெலன் அற்றவர்கள் என்பதை உணர்ந்து , தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாய் அதை நமக்காக செய்தார். அவருடன், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கிருபை மற்றும் ஒரு புதிய ஜீவனை நம்மில் தருகிறார் . ஆனால், அதை நம்மிடம் கொடுப்பதற்காக அவர் எவ்வளவு பெரிய விலையை கொடுத்தார் !

என்னுடைய ஜெபம்

பிதாவே உம்முடைய நேச குமாரனுடைய இரத்தத்தினால் என் பாவங்களை மன்னித்தjதற்காகவும், நீர் எனக்காக அனுபவித்த மனவேதனைக்காகவும் மற்றும் கொடுத்த விலைக்காகவும் உமக்கு நன்றி. என் பாவத்தின் விலையை நான் இலகுவாக எடுத்துக் கொள்ளாமல் , உனது கிருபையை போற்றி உமது மகிமைக்காக அடியேன் ஜீவிப்பேன் . என் இரட்சிப்புக்காக அனைத்தையும் இழந்த இரட்சகர் இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து