இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் எதற்காக வாழ்கிறேன்?" என்பது ஒரு முக்கியமான கேள்வியாக இருந்தாலும், எல்லாவற்றிலும் மிக முக்கியமான கேள்வி "யாருக்காக வாழ்கிறேன்?" ஒருவரால் மட்டுமே நான் இனி மரிக்க மாட்டேன் என்று உறுதியளிக்க முடியும், ஏனென்றால் அவர் ஏற்கனவே எனக்காக மரித்து , மரணத்தை ஜெயித்தார் ! அவர் எனக்காக மரிக்க தயாராக இருந்ததினால் , நான் அவருக்காக மாத்திரமே ஜீவிப்பேன் !

என்னுடைய ஜெபம்

ஜெயத்தின் ஆண்டவரே, இயேசுவின் மூலம் மரணத்தின் மீது எனக்கு ஜெயத்தைக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி என் ஆண்டவரே,அவருடைய பலியாகிய மரணத்தின் மூலமாய் பாவத்தின் மீது ஜெயத்தை எனக்கு அளித்ததற்காகவும் நன்றி. என் வாழ்வில் இன்று எனக்கு ஜெயத்தைக் கொடுத்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றி. இயேசுவின் விலையேறப் பெற்ற நாமத்தின் மூலம் நான் ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து