இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் சொல்வதையும் கற்பிப்பதையும் என் வாழ்க்கை பிரதிபலிக்கும் என்று நான் முழுநிச்சயமாய் நம்புகிறேன். பள்ளியில் வகுப்பிலும் , குடும்பத்தின் மத்தியிலும் , வேலை செய்யும் இடத்திலும் , ​​அல்லது சபையில் பணிபுரியும் போது, ​​நம்மை வழிநடத்துபவர்களுக்கு என்ன ஒரு சிறந்த அறிக்கையை நாம் கொடுக்க முடியும்: என் வாழ்க்கையில் நீங்கள் கண்டும், கேட்டும் உணர்ந்த செயல்களையும் மற்றும் நான் செய்யுங்கள் என்று கூறின காரியங்கள் யாவையும் உங்கள் வாழ்க்கையில் நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள். பவுலானவரின் இந்த அறிக்கை, மற்றவர்களுடன் சேர்ந்து பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு ஆதாரமாக அவர் தனது வாழ்க்கையை எவ்வாறு வாழ்ந்தார் என்பதினால், நமக்கு மிகுந்த நம்பிக்கையை உண்டாக்குகிறது . இந்த பவுலானவரின் உதாரணமான வார்த்தைகள் ஒரு நல்ல தலைவர்களுக்கு ஒரு நல்ல மாதிரியாய் இருக்கிறது : அவர்கள் சொல்வதைச் செய்யுங்கள், ஏனென்றால் அவர்கள் அதை மெய்யென்று காண்பிப்பதற்க்கு அவர்களின் வாழ்க்கையின் குணாதிசயத்தினால் மற்றும் கிரியையினால் அதை விளங்கச் செய்கிறார்கள் !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் உன்னதமான தேவனே , நான் மற்றவர்களுடன் உண்மையாக இணைந்து வாழும்போது எனது நம்பிக்கைகள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் சீரானதாகவும், நீதியுடனும் இருக்கும்போது உண்டாகும் நன்னடத்தையினால் என்னை ஆசீர்வதித்தருளும் . இயேசுவின் நாமத்தினாலே , நான் இதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து