இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் மேன்மையானவர்களோ அல்லது விசேஷத்தவர்களோ அல்லது அப்படி எதிர்காலத்தில் இருப்போமோ என்ற நம்பிக்கை கொண்டு இயேசு நமக்காக மரிக்கவில்லை. மாறாக நாம் எப்படி பட்டவர்கள் அவர் இல்லாமல் நாம் எப்படி இருப்போம் என்று அறிந்து ,குறித்த காலத்தில் பாவிகளாகிய நமக்காக அவர் சிலுவையில் மரித்தார். இப்படிப்பட்ட தேவனுக்கே மகிமையும், கனமும் உண்டாவதாக ; நாம் இப்போது தேவனின் நீதியாக இருக்கிறோம், ஏனென்றால் இயேசுவானவர் நம்முடைய பாவங்களை எல்லாம் தம்மீது ஏற்றுக்கொண்டு, தேவனுடைய கிருபையையும், தேவ நீதியையும் அதற்கு மாறாக நமக்கு கொடுத்தார். (2 கொரிந்தியர் 5:17-21).

என்னுடைய ஜெபம்

பரிசுத்த தேவனே, என் இரட்சகராகிய இயேசுவுக்கு நன்றி. இத்தகைய மகா மேண்மையான ஈவுக்காக என் அன்பையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது! அவர் மூலமாக என்னுடைய ஜீவனுள்ள நன்றியை உமக்கு செலுத்துகிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து