இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்த்தார் . அவர் அவற்றை மாத்திரம் சுமக்கவில்லை; அவர் நமக்கான தண்டனையையும் அனுபவித்தார். அவர் பட்ட வேதனை நமக்கான சொஸ்தமாய் இருந்தது. அவருடைய பாடுகள் நம்முடைய நீதியாக இருந்தது. அவர் நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை ஏற்று துன்பங்களை சகித்த பிறகு, நாம் எப்படி மீண்டும் நம் வாழ்க்கையை பாவத்திற்குள் செல்ல நினைக்கலாம்?

என்னுடைய ஜெபம்

பரிசுத்த தேவனே, எப்படி உம்முடைய விலையேற பெற்ற நேசகுமாரன் இவ்வுலகத்தின் அனைத்து பாவ பாரத்தையும் அவருடைய தலையின் மேல் சுமந்து நிற்பதை நீர் பார்த்துக்கொண்டிருக்கிறீர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீர் மகா தேவனாய் இருப்பதற்காகவும் , மாபெரிதான அன்பை விளங்கச் செய்ததற்காகவும் உமக்கு நன்றி. தேவனே உமக்கு நிகரானவர் யாருமில்லை. உம்முடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாதது உம் அன்பு அளவிட முடியாதது. என் பாவத்தைச் சுமந்து தீர்த்த இயேசுவின் மூலமாய் உமது மகிமைக்காக இன்று வாழ்வேன், அதினால் நான் உம்முடைய பிள்ளையாக வாழ முடியும். உம்முடைய குமாரனாகிய இயேசுவின் விலையேற பெற்ற நாமத்தினாலே நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து