இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவுக்குள் உள்ள புதிய ஆத்துமாவுக்காக பவுலானவர் ஒரு தெளிவான இலக்கைக் கொண்டிருந்தார்; இயேசுவானவர் உங்களுக்குள் உருவாக வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர்கள் கிறிஸ்துவுக்குள் தேறினவர்களாக இருக்கவேண்டுமென்று அவர் விரும்பினார் (கொலோசெயர் 1:28-29). அவர்கள் தங்கள் இருதயத்தை இயேசுவின் மீதே நோக்கமாக வைத்து , இயேசுவின் குணாதிசயங்களை தங்கள் வாழ்க்கையில் பிரதிபலிக்க முற்பட்டால், இந்த காரியத்தில் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு உதவுவார் என்பதை அவர் அறிந்திருந்தார் (2 கொரிந்தியர் 3:18). எனவே, நாம் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, ​​பவுலானவரின் குறிக்கோளைப் போற்றுவோம் - இயேசுவானவரை நமக்குள் ஜீவனோடு இருக்கும்படியாகவும் , அவருடைய தேறின சாயலின் முழு அளவை நம்மில் கொண்டுவரும்படியாகவும் அழைப்போம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனே, இயேசுவின் பிரசன்னம் என்னுள் பெருகட்டும், அதனால் என் வாழ்க்கையில் இயேசுவை இன்னும் அதிகமாகக் காண்பிக்க முடியும். அதே வேளையில் , அன்பான பிதாவே , கேடுகளுள்ள இவ்வுலகத்தின் திசைதிருப்பப்பட்ட வழிகளிலிருந்து எனது அணுகுமுறை, நடத்தை மற்றும் வார்த்தை மாறுப்பட்டதாக இருக்க விரும்புகிறேன்.. இது இன்று உண்மையாக இருக்கட்டும், மேலும் அன்பான பிதாவே , ஒவ்வொரு நாளும் இது இன்னும் தெளிவாக காணப்படட்டும். என் இரட்சகரும், என் இலக்குமான இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து