இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"உலகத்தையும் அதில் உள்ள யாவற்றையும் அவருடைய கரங்களுக்குள்ளாய் வைத்திருக்கிறார் ." ஆம், மேற்கண்ட இந்த வரிகள் மெய்யாக இருக்கலாம், ஆனால் தேவன் மிகவும் சிறப்பான முறையில், தம் மீது விசுவாசமுள்ள தமது பிள்ளைகளை தம்முடைய பலத்த கரங்களுக்குள்ளாய் வைத்திருக்கிறார். அவர்களுடைய ஜீவன் அவருடைய கரங்களுக்குள்ளும் அவரது கிருபைக்குள்ளும் மறைந்திருக்கும்வரை, ஒருவனும் ஒருபோதும் அவற்றை பறித்துக்கொள்ள முடியாது.

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே, உமது உறுதியான மற்றும் பாதுகாப்பான அன்பிற்காக நன்றி. எனது எதிர்காலம் உம்முடைய கரங்களில் தங்கியிருக்கிறது என்ற வாக்கிற்காக நன்றி. உமது அரணான கிருபைக்குள்ளாய் என்னை வைத்திருப்பதற்காக உமக்கு நன்றி. நான் எந்த இடத்தில் எப்படி இருந்தாலும் , என்னை நிலைநிறுத்துவதற்கும், தாங்குவதற்கும் நீர் இருக்கிறீர் என்பதை அறிந்து இன்று நான் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் ஜீவிப்பேன் . இந்த மகா கிருபைக்காக, நான் இயேசுவின் நாமத்தினாலே நன்றி கூறுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து