இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்துவானவர் எனக்குள் ஜீவிக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் மூலமாய் அவரை போல ஆகும் வரையில் அவர் எனக்குள்ளாய் ஜீவிக்கின்றார் ( 2கொரிந்தியர்.3:18). அவரோட கூட நித்யகாலமாய் பரலோகத்தில் வாழும் வரைக்கும் என்னோடே கூட ஜீவிக்கிறார் ( யோவான்14:1-21). நான் எங்கே சென்றாலும், எதை செய்தாலும் அவர் என் கூடவே இருக்கிறார். நம்முடைய இலக்கு என்னவென்றால் அவர் நமக்குள்ளாய் வாழ்வது மாத்திரமல்ல, முழுமையாய் இருக்கும்படி செய்வதேயாகும். நிச்சயமாக, அது அவருடைய வல்லமையினாலும் அவருடைய ஆவியின் ஈவினாலும் நிறைவேற்றப்படும் !

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , என்னுள் இருக்கும் இயேசுவின் சமூகம் இன்று உமது ஊழியத்தை செய்ய என்னை உற்சாகப்படுத்தும் . உமது கிருபையுள்ள குமாரனின் பிரசன்னத்தின் மூலமாய் உம் நித்திய கிருபையானது உம்முடைய குணாதிசயங்களுக்கும், சித்தத்துக்கும் என்னை அழைக்கிறது . இயேசுவே, தயவுகூர்ந்து என் இருதயத்தை நம் பிதாவின் இருதயத்தைப் போல ஆக்குங்கள். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து