இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சில நேரங்களில் ஜீவிப்பதற்கான ஒரு சிறந்த வழி உறுதியுடன் இருந்து, நாம் பார்க்கக்கூடிய காரியங்களும். அல்லது சூழ்நிலையும் எவ்வாறாயினும் தேவன் மீது அதிக விசுவாசத்துடன் நம்பிக்கையாய் இருக்க வேண்டும். நம்பிக்கையின் மூலமாக சந்தோஷமாயிருப்பதை தெரிந்துக் கொண்டு , உபத்திரவ காலத்திலே பொறுமையுடன் உறுதியாய் இருப்பதை தேர்ந்துதெடுத்து , நம்முடைய விருப்பங்களையும் இன்னுமாய் முடிவுகளையும் ஜெபத்திலே விசுவாசமுள்ளவர்களாய் இருப்பதை அறிந்துகொள்ளுவோம் , ஏனென்றால் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய தேவன் நம் விண்ணப்பங்களையெல்லாம் கேட்பதினால் நம் சூழ்நிலைகளை அவரால் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம் .

என்னுடைய ஜெபம்

வல்லமையுள்ள தேவனே , என்னில் ஒரு திடமான மற்றும் உறுதியான இதயத்தை உருவாக்குங்கள், அதனால் எனக்கு எவ்வளவு உபத்திரம் இருந்தாலும் மகிழ்ச்சியுடன் நிலைத்திருப்பேன். உமது விசுவாசமுள்ள குமாரனின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து