இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எங்கள் நம்பிக்கை தேவனையே சார்ந்திருக்கிறது ! அவரே நமது பாதுகாப்பின் ஆதாரம் . நம் ஆனந்த களிப்புள்ள பாடல்களுக்குக் காரணம் அவர்தான்! அவரே நமது பாதுகாப்பும் நம்பிக்கையும் ஆவார். நாம் சந்தோஷப்படுவதற்கு அவர்தான் காரணம். தேவனிடம் அடைக்கலம் புகுந்து அவருடைய நாமத்தை நேசிக்கும் அனைவரும் அவரில் சந்தோஷித்து கெம்பீரிப்பார்களாக!

என்னுடைய ஜெபம்

எங்கள் மகத்துவமுள்ள தேவனே மற்றும் எங்கள் மென்மையான, அன்பான பிதாவே , நாங்கள் உம்மைப் துதிக்கிறோம் போற்றுகிறோம் . உம்முடைய தயவுள்ள இரக்கம், அற்புதமான பரிசுத்தம், செழிப்மான மன்னிப்பு மற்றும் முடிவில்லாத அன்பு ஆகியவற்றில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் உம்மில் காண்கிறோம். நீரே எங்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கை. உமது நாமத்திலும், உமதுநேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலும் நாங்கள் மகிழ்ந்து துதிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து