இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவன். நீங்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். யாவரும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது போலவே, நாமும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம். நாம் அங்கு இருக்கிறோம் என்பதை யாரும் அறிவதற்கு முன்பே அவர் எங்களை அறிந்திருந்தார். நம்முடைய வருகையை எவரும் திட்டமிடுவதற்கு முன்பே அவர் எங்களுக்காக திட்டங்களை உண்டுபண்ணி வைத்திருக்கிறார். மேலும் அவர் எங்களை பிரமிக்க தக்க வகையில் சீராய் உண்டாக்கினார் ! அது நமக்கு எப்படி தெரியும்? தேவன் உண்டாக்கின அனைத்தையும் நோக்கி பாருங்கள்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , என் இரட்சகரும் மீட்பருமாகிய ஆண்டவரே , நான் என்னை அறிந்து கொள்வதற்கு முன்பே அடியேனை அறிந்ததற்காக உமக்கு நன்றி. என் வாழ்க்கையை தேர்ந்தெடுத்து எனக்கு கொடுத்ததற்காக உமக்கு நன்றி. நீர் எனக்கு அருளின ஈவுகளுக்காகவும் , திறன்களுக்காகவும், திறமைகளுக்காகவும் நன்றி. இப்போது அடியேன் உம்மால் சிறப்பு பெற்றவனாக வாழ எனக்கு அருள்செய்யும். இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து