இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மை இரட்சிக்க தேவனுடைய திட்டமானது ஆராய்ந்து அறியமுடியாதது. நமது பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்கான அவரது அநாதி தீர்மானம் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. அவர் ஞானத்திலும் அறிவிலும் மிகுந்த ஐசுவரியமுள்ளவர். நம்மால் என்ன செய்ய முடியும், அவரிடம் சென்று நம் வாழ்வில் அவருடைய கிரியையும், அவரது சித்தத்தையும் புரிந்துக்கொள்ள நம்முடைய மணக்கண்களை திறக்கும்படி வேண்டிக்கொள்ளுவோம் .

என்னுடைய ஜெபம்

விலையேறப்பெற்ற மற்றும் சர்வவல்லமையுள்ள பிதாவே , ஒவ்வொரு காலத்திலும், இவ் வுலகத்தில் மாத்திரமல்ல இன்னும் அதிகமாய் என்னுடைய வாழ்க்கையில் நீடித்திருக்கும் உம் சமூகத்தின் வல்லமையினால் என்னை மறுபடியுமாய் விழித்தெழ செய்வதற்காக உமக்கு நன்றி. இன்று அடியேன் கையிட்டு செய்யும் எல்லாவற்றிலும் உம்மையே முதன்மையாய் வைக்க முற்படுகையில் என்னை ஆசீர்வதியுங்கள். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து