இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இவ்வளவு சிறிய வசனத்தில் எவ்வளவு பெரிய வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது ! தேவன் அநீதியுள்ளவரல்லவே - நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நாம் அவரைத் தேடும்வேளைகளில் ,அவர் நமக்கு எதை மறுப்பார்? அவர் நாம் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறக்கமாட்டார் - நாம் செய்த நன்மையான காரியங்களை பரலோகத்தில் உள்ள ஜீவபுஸ்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார் ! கிறிஸ்துவுக்குள் உள்ள பரிசுத்த சகோதர சகோதரிகளுக்கு நாம் செய்யும் ஊழியத்தில் , ​​நாம் அவர்களை ஆசீர்வதிக்கிறோம் ! நாம் அவருடைய சொந்த ஜனங்கள் !! கிறிஸ்துவுக்குள் நாம் இன்னும் தேறினவர்களாக வேண்டும் என்பதே உண்மையான உற்சாகமாகும் .

என்னுடைய ஜெபம்

தேவனே , நீர் மிகவும் கிருபையுள்ளவர் அதற்காக உமக்கு நன்றி. உம்முடைய நற்பண்புகளை விவரிக்கும் எளிமையான மற்றும் ஆழமான வார்த்தைகளை கேட்டதினால் எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நான் உம்முடைய பிள்ளையாய் இருப்பதினால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என் மூத்த சகோதரனாகிய இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து