இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

23 ஆம் சங்கீதத்தில் தேவனானவர் மாபெரிதான நல் மேய்ப்பராக இருப்பதைப் பற்றிய தனிப்பட்ட முறையில் அறிக்கையிடுவதை நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கிறோம். இந்த சங்கீதமானது நம்மை மேய்த்து, நமக்காக அவருடைய எதிர்காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்படி தேவனிடம் செய்யும் ஒரு விண்ணப்பமாய் இருக்கிறது . தேவனுடைய பிள்ளைகளின் வாழ்வில், அவர்கள் எங்கிருந்தாலும், எப்பொழுது இருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கையில் நாம் ஜெபிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சிறிய ஜெபம் ஒரு சிறந்த நினைப்பூட்டலாகும்! இந்த வாக்குறுதியைக் கைக்கொண்டு மிகுந்த உபத்திரவத்திலிருந்து வெளியே வந்தவர்களுடன் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் பரலோகத்தின் காட்சியை பார்க்க இதுவும் ஒரு காரணமாகும் : சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களைமேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான் ( வெளிப்படுத்தின விசேஷம் -7 :17 ) ஆம்! தேவனானவர் இன்றும் என்றும் சதாகாலங்களிலும் தம்முடைய மக்களுக்கு மாபெரிதான மேய்ப்பராக இருப்பார்!

என்னுடைய ஜெபம்

நித்திய பிதாவே, மாபெரிதானவர் "நீரே ", நான் என் பிள்ளைகளுக்கு என்னுடைய விசுவாசத்தை கற்றுக்கொடுக்க முற்படுகையில் தயவுக்கூர்ந்து என்னை ஆசீர்வதியுங்கள். அவர்களையும் அவர்களின் அடுத்த தலைமுறையினரையும் ஆசீர்வதியுங்கள் , இன்னுமாய் அவர்களை உம் சத்தியத்தில் வழிநடத்துங்கள், இதனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு துடிப்பான மற்றும் உணர்ச்சிமிக்க விசுவாசத்தை வழங்குவார்கள். எல்லா தலைமுறையினரும் உம்மை மேய்ப்பராக பெற்றதினால் மிகுந்த மகிழ்ச்சியைக் பெற்றுக்கொள்வார்களாக ! இயேசுவின் நல்ல நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து