இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஏற்கனவே ஐசுவரியவான்களாக இருப்பவர்களுக்கான ஒரு செய்தி அல்ல. இல்லை, அந்தச் ஐசுவரியத்தை பெற விரும்பும் நம் அனைவருக்கும் இது பொருந்தும் . அதன் மீது ஏங்குவதும், ஆசைப்படுவதும், பூமிக்குரிய செல்வத்தை நாடிச் செல்வதும் பல கொடூரமான ஆபத்துகளுக்கு நம்மை உட்படுத்தும் . விளம்பரம் மற்றும் சமூக ஊடக செய்திகளால் தூண்டப்பட்டு, நாம் பார்க்கும் அனைத்தையும் விரும்புவதற்கு நம்மை வழிநடத்தும் உலகில், "நீங்கள் ஆசைப்படாதீர்கள்..." என்பது இன்னும் தேவனின் பத்து கட்டளைகளில் ஒன்றாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த பேராசையைத் தடுக்க உதவும் நேர்மறையான கட்டளையை இயேசு நமக்கு நினைப்பூட்டினார்: "முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் " (மத்தேயு 6:33).

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , உம்முடைய பல ஆசீர்வாதங்களுக்காக நன்றி. நீங்கள் ஏற்கனவே எனக்கு வழங்கிய ஆசீர்வாதங்களால் திருப்தியடைவதற்கும் அதில் மற்றவர்களுக்கு தாராளமாக இருப்பதற்கும் தயவுக்கூர்ந்து எனக்கு உதவிச்செய்யும் . உம் மீதும் உம்முடைய நேச குமாரன் மீதும் எனது கவனத்தை செலுத்தி, மற்றவர்களுக்கு உம்முடைய ஆசீர்வாதங்களை வழங்கும் ஒரு வழியாக அடியேன் இருக்கும்படி என்னை வழிநடத்தும் ! உமது குமாரனும் என் இரட்சகருமான இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து