இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்களிடம் பெருமைபாராட்ட நியாயமான ஒரு அடிப்படை காரியம் இருக்கிறதா? அந்த பெருமைக்கு உங்களின் ஆதாரம் என்ன? சிலுவையும் இன்னுமாய் அவருடைய உயிர்த்தெழுதல் மூலமாய் கர்த்தர் நமக்காகச் செய்ததைப் பற்றி மேன்மைபாராட்டுவதே நம்முடைய ஒரே, மெய்யான மற்றும் நம்பகமான ஆதாரம் என்று பவுலானவர் நமக்கு நினைப்பூட்டுகிறார். நாம் சுயமாக சம்பாதித்த , அடைந்த, செய்த அல்லது சாதித்த எதற்கும், இந்த ஆதாரமாகிய மேன்மைபாராட்டலுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் பங்குகொள்வதன் மகிழ்ச்சி மற்றும் உறுதியுடன் ஒப்பிடுகையில், பெருமைப்படுவதற்கான மற்ற எல்லா காரணங்களும் வீண் புகழ்ச்சியும் மாயையான கண்ணோட்டமேயாகும் . நம்முடைய மேன்மைபாராட்டல் கர்த்தருக்குள் இருப்பதாகவும், சிலுவையின் மூலம் அவருடைய தியாகபலியினால் உண்டான ஜெயத்தை குறித்தே எப்பொழுதும் இருக்கட்டும் !

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , அடியேனை மன்னித்தருளும் , சில தற்காலிக அல்லது கடந்துப்போகும் சாதனைகளின் காரணமாக நான் என்னை மேன்மையாக நினைத்தேன். இயேசுவின் அன்பையும், சிலுவையிலே காண்பிக்கப்பட்ட இயேசுவின் கிருபையையும் மேன்மைபாராட்ட ஓர் அடிப்படை காரியத்தை எனக்கு வழங்கியதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே , அடியேன் உமக்கு நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து