இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பவுலானவர் கலாத்தியர்களுக்கு எழுதிய நிருபத்தில் , தேவனின் கிருபையைப் பற்றிய தனது உணர்வுப் பூர்வமான காரியங்களோடு இந்த எண்ணி முடியாத நினைப்பூட்டலுடன் நிறைவுசெய்கிறார் : யூதர்கள் மற்றும் புறஜாதிகள் இருவரும் இயேசு கிறிஸ்துவுக்குள் விசுவாசத்தினால் நியாயப்படுத்தப்பட்ட தேவனின் ஜனங்களாய் இருக்கிறார்கள் , அவருடைய இஸ்ரவேல் ஜானங்களை போலவே . தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மேல் விசுவாசம் வைத்து நீண்ட பயணத்தை மேற்கொண்ட ஆபிரகாமைப் போல, தேவனின் வழியை பின்பற்றி, இயேசு கிறிஸ்துவுக்குள் அவர் அளித்த வாக்குத்தத்ததின் மேல் நம்பிக்கைவைத்த நடந்த அவர்கள் யாவரும் "தேவனின் இஸ்ரவேலர்கள் ஆவர் ". எகிப்திலிருந்து யாத்திராகமத்தின் மூலம் தேவனுடைய வல்லமையினாலும், பஸ்கா ஆட்டுக்குட்டியின் தெளிக்கப்பட்ட இரத்தத்தினாலும் விடுவிக்கப்பட்டவர்களைப் போல, இன்று தேவனுடைய மக்கள் இரத்தத்தால் மீட்கப்பட்டு பாவம் மற்றும் மரணம் ஆகிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்துவுக்குள் , யூதர்களும் யூதர்களல்லாதவர்களும் கிறிஸ்து இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தின் மூலமாக கிருபையால் தேவனின் வாக்குத்தத்ததில் ஒன்று சேர்க்கப்படுகிறார்கள். யூதரோ அல்லது புறஜாதியோ, அடிமையோ அல்லது சுயாதினரோ , ஆணோ அல்லது பெண்ணோ என்று இல்லை; நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாக இருக்கிறோம் (கலாத்தியர் 5:26-29). தேவனின் ஜனங்களாக, அவர்கள் கிருபை மற்றும் சமாதானத்தைப் பெறுகிறவர்களாயிருக்கிறோம் - இரக்கம் மற்றும் சமாதானம் ஆகிய இவ்விரண்டையும் தேவனின் மக்களாக நாம் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் இடையே கடைப்பிடிக்க வேண்டும்.

என்னுடைய ஜெபம்

எல்-ஷடாய், உடன்படிக்கையின் தேவனாகிய ஆண்டவரே, விசுவாசத்தைக் காத்து, உமது வாக்குத்தத்தத்தில் நம்பிக்கை வைத்த எங்கள் விசுவாச முன்னோடிகளுக்காக உமக்கு நன்றி. இயேசுவுக்குள் எங்களுக்கும், எல்லா மக்களுக்கும் உமது வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக நன்றி. இயேசுவுக்குள் எனக்கு உள்ள விசுவாசத்தின் மூலமாய் என்னை ஆசீர்வதித்ததற்கும், உம் பிள்ளைகளில் ஒருவராக என்னையும் சேர்த்ததற்காகவும் உமக்கு நன்றி. இப்பொழுது, உம்முடைய மக்களாகிய நாங்கள், எங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே, உம்மை துதித்து ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து