இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வேதாகமத்தின் துவக்க அதிகாரத்திலே அநேக பெரிய உண்மைகள் நமக்குக் கற்பிக்கப்படுகின்றன. முதலாவது, நாம் ஆணும் பெண்ணுமாக தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். இரண்டாவது, நாங்கள் வித்யாசமாக உண்டாக்கப்பட்டிருக்கிறோம் ( ஆணும், பெண்ணுமாக ).மூன்றாவது ஒருவரையொருவர் ஆசீர்வதிக்கவும், தாங்கவும் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். நான்காவது, கணவனும் மனைவியும் தங்கள் தங்கள் குடும்பங்களை விட்டு விட்டு அவர்களின் வாழ்க்கையை ஒன்றாய் சேர்ந்து கட்டுவார்களாக ( ஆதியா 1:26,2:25). தேவனின் சாயலினால் உண்டாக்கப்பட்ட ஒரு வாழ்க்கைத் துணையை நாம் நம்முடைய வாழ்க்கைக்கு கண்டுபிடிக்கவேண்டும். அப்படி கண்டுபிடிப்பது நன்மையும், தேவச் சித்தமுமாய் இருக்கிறது .

என்னுடைய ஜெபம்

அப்பா, என் வாழ்க்கைக்கென்று நீர் கொண்டுள்ளதான உமது திட்டங்களுக்காக நன்றி. (திருமணமானவர்களுக்கு). நீர் எனக்கு கொடுத்ததான வாழ்க்கைத்துணைக்காக உமக்கு நன்றி மற்றும் அடியேனுடைய துணையை ஆசீர்வதிக்கவும், இன்னும் அவர்களை எல்லா விதத்திலும் திருப்தியடைய செய்யவும் எனக்கு நீர் உதவிசெய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். (துணை இழந்தவர்களுக்கு )அருமை பிதாவே, என்னுடைய இழப்பு மற்றும் துக்கத்தின் உணர்வுகளை தேற்றும்படியாக வேண்டுகிறேன், இன்னுமாய் என் வாழ்க்கையிலே விசேஷித்த நபர் மூலமாய் நீர் கொடுத்த ஆசீர்வாதத்திற்காக நன்றியுள்ளவனாய் இருக்கிறேன் என்பதை அறிவீர். (திருமணம் ஆகாதவர்கள்) என் வாழ்க்கைக்குரிய பாதையை அறிந்துக் கொள்ளும்படி உதவிச்செய்யும் மற்றும் உண்மையும் உத்தமுமாய் வாழ்கின்ற வாழ்க்கையின் மூலமாய் மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படி அடியேனை பயன்படுத்தும்படி வேண்டுகிறேன்.(விவாகரத்தானவர்கள்) அன்பின் பிதாவே, என் இழப்பின் உணர்வை ஈடுக்கட்டியும், உமக்கு ஊழியம் செய்யவும், மகிமைக்கொண்டுவரவும் என்னை பயன்படுத்திக்கொள்ளும்படி உம்மை வேண்டுகிறேன். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து