இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பயத்திலிருந்து உங்கள் இருதயத்தை என்ன பாதுகாக்கிறது? ஒரே ஒரு உண்மையுள்ள பாதுகாவலர் மட்டுமே , அவரது நாமம் ஆண்டவராகிய கர்த்தர். அவரே நம் நம்பிக்கையும் பாதுகாவலரும் ஆவார். பவுலானவர் நீண்ட காலத்திற்கு முன்னதாக வல்லமையாய் கூறியது என்னவென்றால் ஜெபமும், பரிசுத்த ஆவியானவருமே தேவனுடைய இரட்சிப்புக்கான நம்முடைய வாக்குறுதிகளாயிருக்கிறது . ஒன்று நாம் மரணத்தினின்று இரட்சிக்கப்பட்டு தேவனுடைய ஊழியத்தை இன்னும் வல்லமையாய் செய்யவது அல்லது மரணத்தின் மூலமாய் இரட்சிக்கப்பட்டு நித்தியத்தில் அவரோடு கூட பங்கடையச் செய்வது . நமக்கு சம்பவிப்பதும், எதிர்காலமும் தேவனுடைய கரங்களில் இருக்கும்போது நாம் சிக்கிக் கொள்ளமாட்டோம் !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள இரட்சகரே , எந்த சூழ்நிலையிலும் உமக்காக பற்றுதலோடு வாழும்படி எனக்கு தைரியத்தை தயவாய்த் தாரும். என்னை நீர் இரட்சிப்பீரென்று உம்மீது நம்பிக்கையாய் இருக்கிறேன். இயேசுவின் நாமத்திலே உறுதியாய் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து