இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எனக்கு பல நண்பர்கள் உள்ளனர், அவர்களோ பேசும் விதத்தில் புத்திசாலிகள். அவர்கள் பேசும்போது, எல்லோரும் அவர்களை மிகவும் உன்னிப்பாய் கவனிப்பார்கள் ஏனென்றால் அவர்களுடைய வார்த்தைகள் எப்போதுமே ஞானமுள்ளதாயும், நேரத்திற்கேற்றதாயும், மதிப்புள்ளதாயும் இருக்கிறது. அவர்களின் நீதியுள்ள வாழ்க்கை மற்றும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துதல் கேட்போரை ஆசீர்வதிக்கிறதாயும் , செழிப்படையச் செய்கிறதாயும் இருக்கிறது. இருப்பினும், அநேகர் எல்லாவற்றையும் குறித்து தொடர்ந்து பேசுகிறார்கள் ஆனால் அவர்கள் போதித்ததை கையாள சிறிது நேரங்கூடச் செலவிடுவதில்லை. தங்களுக்கு எதுவும் தெரியாத விஷயங்களைப் பற்றி தங்கள் சொந்த கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று அவர்களின் வார்த்தைகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் ஞானமும் நிறைந்த தேவனே, நான் பேசுவது நான் பேசுவோருக்கு பயனளிக்காவிட்டால், என் உதடுகளைக் காத்துக்கொள்ள எனக்கு ஞானத்தையும் சுய கட்டுப்பாட்டையும் தயவுகூர்ந்து அளியுங்கள். என்னுடைய வார்த்தைகள் உண்மையுள்ளதாயும் உதவக்கூடியதாயும் இருக்கும்படி உதவியருளும். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து