இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் செய்து கொண்டிருக்கும் எந்த காரியம் என்றென்றும் நிலைத்திருக்கும் ? அதிகமாக எந்த காரியமும் இல்லை —- தேவன் மீதும் அவருடைய பிள்ளைகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் அன்பும், நீங்கள் அவருக்குச் செலுத்தும் துதியும், அவருடைய ஆவியை கொண்டு தீர்க்கதரிசிகள் மூலமாயும் , அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாகவும் அவர் நம்மிடம் பேசிய வார்த்தையுமே ஆகும் . இந்த காரியங்களில் நீங்கள் முதலீடு செய்யுங்கள், அப்படி செய்தால் என்றென்றும் நிலைத்திருக்கிறதான சத்தியம் , ஆசீர்வாதம் மற்றும் நம்பிக்கை இல்லாமல் இருக்க மாட்டீர்கள்!

என்னுடைய ஜெபம்

நித்தியமுள்ள தேவனே , அன்பான பிதாவே , மெய்யாக நிலைத்திருக்கும் காரியங்களை உணர்ந்து, அதில் என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து கிரியை நடப்பிக்க எனக்கு ஞானத்தைத் தந்தருளும். ஒருபோதும் அழிந்து போகாத விஷயங்களில் என் வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்று அடியேன் விரும்புகிறேன். என்றென்றும் நிலைத்திருக்கும் சத்தியத்தை எனக்கு போதிக்க இயேசுவானவரை அனுப்பியதற்காகவும் உமக்கு நன்றி. அவருடைய வார்த்தைகளுக்கும் அவருடைய வாழ்க்கைக்கும் நான் கீழ்ப்படிந்திருக்க விரும்புகிறேன். ஒரு மெய்யான வாழ்க்கையை வாழ எனக்கு உதவும் வழிகளில் என்னை ஆசீர்வதியுங்கள். என் நித்திய இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து