இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஐசுவரியவான் மற்றும் தரித்திரர் , வாலிபர்கள் மற்றும் முதியவர்கள் , பலவீனர் மற்றும் பெலனுள்ளவர் , ஒல்லியானவர் மற்றும் கணமானவர் அனைவருக்கும், ஒரே ஒரு செய்தி, ஒரு நாமம் மற்றும் ஒரு மெய்யான வரலாறு இவைகள் மட்டுமே ஒருவருக்கு நித்திய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அந்த ஒரு செய்தி, வரலாறு மற்றும் நாமம் தேவ நற்செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது - இயேசு கிறிஸ்துவுக்குள்ளாய் உலகிற்கு தேவனுடைய நற்செய்தி. தேவனுடைய இவ் வாழ்க்கைகுரிய நற்செய்தி இயேசுவுக்குள்ளாய் அனைவருக்கும் ஒரு கதை , செய்தி மற்றும் நம்பிக்கை. Verseoftheday.Com மற்றும் எங்கள் தலை நிறுவனமான , Heartlight.org ஆகியவை பால் பால்க்னரின் நட்பு, ஊக்கம் மற்றும் எழுதப்பட்ட உள்ளடக்கத்தால் ஆசீர்வதிக்கப்பட்டன. கர்த்தருக்கும் சுவிசேஷத்துக்கும் வெட்கப்படாத ஊழியனாகிய பால் பால்க்னரின், சமீபத்தில் இயேசுவோடு இருக்கும்படியாய் பட்டம் பெற்றார்( மரித்து அடக்கம்பண்ணப்பட்டார் . தயவு செய்து சிறிது நேரத்தை ஒதுக்கி எங்களுடன் அவரைக் பற்றி படித்து கௌரவப்படுத்துங்கள், https://www.heartlight.org/articles/202207/20220714_great.html

என்னுடைய ஜெபம்

மா பெரிதான மீட்பரே, இன்று உம்முடைய நற்செய்தியை நான் அறிவிக்க என்னை மேலும் தைரியப்படுத்துங்கள். உம் வார்த்தையை கேட்க காத்திருப்பவர்களைப் பார்க்கும்படியாய் என் கண்களைக் திறந்தருளும் . நான் வெட்கப்படாமல், இயேசுவின் சுவிஷேத்தை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதற்கு உமது ஆவியால் என்னை நிரப்புங்கள். இயேசுவின் மகிமையான மற்றும் வெற்றிகரமான வருகையின் நம்பிக்கையை விசுவாசத்துடன் என் வாழ்க்கையை நிரப்புவதினால் , நான் அதை ஆர்வத்துடன் மற்றவருக்கு பகிர்ந்து கொள்கிறேன், அதினால் உம் கிருபையை அவர்கள் அறிந்து கொள்வார்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து