இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய சரீரம் குறைபாடுள்ளது மற்றும் மரணமடையக்கூடியது . நம்முடைய பலவீனமும் பாவமும் அவர்களைக் கறைப்படுத்துகின்றன. ஆனால், இயேசு கிறிஸ்துவுக்குள் நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட தேவனுடைய கிருபையினாலும் (எபேசியர் 2:1-10) பரிசுத்த ஆவியின் மறுரூபமாக்கும் வல்லமையினாலும் (2 கொரிந்தியர் 3:17-18), நம்முடைய எதிர்காலம் அழிந்து போகும் சரீரத்தோடும், இந்த உலகத்தின் மண்ணோடும் முடிந்துப்போவதில்லை, ஆனால் நமது பரிபூரண ஆண்டவரின் வல்லமையுள்ள ஜீவனுக்குள் இருக்கிறது . இயேசுவே நம்மை இரட்சிக்கிறவர் மற்றும் பவுலானவர் ரோமர் 8ஆம் அதிகாரத்தில் முழுமையாக விளக்கி கூறுவதுப்போல பரிசுத்த ஆவியானவர் - நமக்கு வல்லமை அளிப்பவர்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , என் அழிந்துப்போகும் சரீரத்தின் மரணத்திற்கு அப்பாற்பட்ட வாழ்க்கையின் ஈவுக்காக உமக்கு நன்றி. என் பாவத்தினால் கறை படிந்த மாம்ச சரீரத்திலே பரிசுத்தத்தை கொடுத்ததற்காக நன்றி. என்னை மரணத்திலிருந்து விடுவித்து உமது மகிமைக்குள் கொண்டு வந்ததற்காக நன்றி. மென்மேலும் இயேசுவைப் போல நான் மறுரூபமாவதற்கு பரிசுத்த ஆவியின் வல்லமையை வழங்கியதற்காக நன்றி. இப்போது, ​​அன்பான பிதாவே , என் வார்த்தைகள், கிரியைகள் மற்றும் எண்ணங்கள், இன்றும், அதைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு நாளும் நான் செய்யும் எல்லாவற்றிலும் உமது கிருபையையும், வல்லமையையும் பிரதிபலிக்கட்டும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து