இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பவுலானவர் தனது மரணத்தை எதிர்கொண்டபோது அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர் சிறையில் இருக்கும்போதே முற்றிலுமாய் கைவிடப்பட்டவர் (2 தீமோத்தேயு 4:10-13). அவர் திருச்சபையின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார் (அப்போஸ்தலர் 20:25, 28-31; 2 தீமோத்தேயு 4:3-10), ஆனாலும் அவர் இரண்டு சத்தியத்தின் மேல் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்: (1) அவர் கர்த்தருக்கு உண்மையும், உத்தமுமாக ஊழியம் செய்திருக்கிறார் (2 தீமோத்தேயு 4:6-8), (2) அவர் மரித்த பிறகு கர்த்தர் அவரை ஏற்றுக்கொள்வார் (பிலிப்பியர்-21: 4-21; 6-21). அந்த இரண்டு சத்தியங்களுக்கு நம் வாழ்வில் மிகவும் முக்கியமான இலக்குகளாக இருக்க வேண்டாமா? அவைகளே நமது இலக்குகளாக இருப்பதால், அவைகள் நம் வாழ்வில் நிறைவேறும் என்று எதிர்ப்பார்த்து , ​​இயேசுவுக்காக ஒவ்வொரு நாளும் வாழ ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவோம் !

என்னுடைய ஜெபம்

உண்மையும் அன்பும் நிறைந்த தேவனே , உமது கிருபையால் எனக்கு இரட்சிப்பை அளவில்லாமல் வழங்கி ஆசீர்வதித்தீர். அந்த கிருபையின் ஐசுவரியத்தினால் என்னைப் பெலப்படுத்துங்கள். நான் சில சமயங்களில் பலவீனமாகவும், என் விசுவாசத்தில் தடுமாறியும் இருக்கிறேன். உமது கிருபை அளவற்றது என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் அதை சந்தேகப்படவோ அல்லது தவறாகப் பயன்படுத்தவோ விரும்பவில்லை. எனவே நான் உம்மை முகமுகமாய் காணும் வரை உமக்காக உண்மையுடனும் உணர்ச்சியுடனும் வாழ எனக்கு பெலனையும் தைரியத்தையும் தாரும் . இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து