இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எல்லா ஒழுங்கற்ற செயல்களும் அகற்றப்படும்போது, ​​உங்கள் உண்மையான நம்பிக்கை என்ன? பட்டங்கள் , விருதுகள், பாராட்டுக்கள் மற்றும் கைதட்டல்களை நீங்கள் ஒதுக்கித் தள்ளும்போது, ​​உங்கள் முக்கியத்துவத்தின் அடிப்படை என்ன? நம்பிக்கையின் ஒரே ஒரு ஆதாரம் , அடிப்படை நோக்கத்திற்கும் அவரே நம்பத்தகுந்தவர். ஒரே ஒருவர் - கர்த்தராகிய ஆண்டவர் - என்றென்றும் நிலைத்திருக்கிறவர் ! பரலோகத்திலுள்ள நம்முடைய பிதா மட்டுமே நம் வாழ்க்கை விசேஷமானது என்பதை உறுதிப்படுத்துகிறார். ஆகவே, நம்முடைய நம்பிக்கையை கர்த்தரிடத்தில் வைத்தால் , அவர் நமக்கு அடைக்கலமாக இருப்பாராக !

என்னுடைய ஜெபம்

கர்த்தாவே, எங்கள் பிதாக்களின் தேவனும் மீட்பருமானவரே , உம் அநேக வாக்குத்தத்தங்களின் பாதுகாவலரே , என்னுடைய நம்பிக்கையை, எதிர்காலத்தை, விஷேசித்தவைகளை உம் கரங்களில் ஒப்புக்கொடுக்க அனுமதித்தமைக்காக உமக்கு நன்றி. அடியேனை நீர் வெட்கமடைய செய்யமாட்டீர் என்பதை அறிந்துக் கொள்ள தைரியத்தையும், நம்பிக்கையையும் தாரும், ஆனால் உம்முடைய சமூகத்தில் நான் நிற்கும் அந்நாளிலே உம் நீதியை என்னுடன் பகிர்ந்தருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து