இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆவிக்குரியதாக இருந்தாலும் சரி, மாம்ச பிரகாரமாக இருந்தாலும் சரி, வறட்சியானது உள்ளான ஆத்துமாவை உறிஞ்சி, அனைத்து உயிரினங்களையும் வாடச் செய்கிறது. ஆயிரம் ஆயிரம் பலமுள்ளவர்களாக, இருதயங்களில் ஒருங்கினைந்து தேவன் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும் என்று ஜெபிக்கடவோம் : 1) இந்த தேவன் வறண்டு காணப்படும் மற்றும் கடினமான காலங்களில் இருக்கும் நிலங்களுக்கு மழையையும் புத்துணர்ச்சியையும் தருவார். 2) கஷ்டங்கள், சவால்கள், சோதனைகள், மனச்சோர்வுகள் மற்றும் தோல்விகளில் சிக்கி மனமுடைந்து, ஊழியம் யாவற்றையும் விட்டுவிடும்படி விலும்பில் இருக்கும் தம்முடைய ஊழியர்கள் அனைவருக்கும் தேவன் புத்துணர்ச்சி அளிப்பார். இன்றைய தினம் நமது உலகத்திற்கும், தேவனுடைய மக்களுக்கும் புத்துணர்ச்சியின் நாளாகவும், மறுமலர்ச்சியின் தொடக்கமாகவும் இருக்க ஜெபிப்போம்! * 190 நாடுகளில் உள்ள 300,000 க்கும் மேற்பட்ட மக்கள் இன்று இந்த வார்த்தைகளை வாசிக்கிறார்கள் , எனவே இந்த விண்ணப்பத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒன்றாக பங்கேற்பதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்ல தேவனே; நாங்கள் கேட்பதை விட அல்லது கற்பனை செய்வதை விட அதிகமாக உம்மால் செய்ய முடியும். ஒவ்வொரு நிலத்திற்கும், வறண்ட இருதயத்திற்கும், வாடிப்போன ஆவிக்கும் புத்துணர்ச்சி அளிக்ககும்படி நாங்கள் இன்று எங்கள் வாயின் வார்த்தையினாலும் இருதயத்தினாலும் ஒருமித்து கேட்கிறோம் . தயவு செய்து உம் ஆசிர்வாத மழையை நமது உலகின் வறட்சி நிறைந்த பகுதிகளுக்கு அனுப்புங்கள். மேலும் அன்பான பிதாவே, எங்கள் உலகம் முழுவதிலும், எங்கள் சபைகளிலும், உமக்கு ஊழியஞ் செய்பவர்களின் இருதயங்களிலும் பரிசுத்த ஆவியை ஒரு புதிய வழியில் ஊற்றுவதன் மூலமாக ஒரு மறுமலர்ச்சியை தாரும் . நம்முடைய ஆண்டவரும் ராஜாவுமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இதைக் கேட்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து