இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் ( 1 தீமோ 6:6).எனவே நாம் திருப்தி அடைவதற்கு என்ன தேவை?உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம் என்று பவுல் தீமோத்தேயுக்கு நினைப்பூட்டுகிறார். நமது விருப்பங்கள் இந்தப் பாதையை விட்டு தவறும்போதும், மோகம் மற்றும் அதிக பேராசை நம்மை மேற்கொள்ளும் போதும் நம் வாழ்க்கை கட்டுப்பாட்டை இழக்கிறது. மேலும், நம் உணவுக்காக தேவனை மாற்றும் போது, எது நம் விக்கிரகமாகிறது ? ஆகையால்,..... விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.(கொலோ 3:5) . நாம் போதுமென்று இருக்க வேண்டுமென்றும், மற்றவற்றை அவருடைய கிருபையின் பொங்கி வழிதலாகப் பார்க்க வேண்டுமென்றும் தேவன் விரும்புகிறார்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே , தேவைக்கு அதிகமான பேராசை, சுயஆசை மற்றும் களியாட்டம் ஆகியவற்றில் சிக்கியதற்காக என்னை மன்னியுங்கள்.நீங்கள் என் மீது மிகவும் செழிப்பாக பொழிந்த ஆசீர்வாதங்களில் திருப்தியடையவும், உம்மிடமும், என் வாழ்க்கையில் நீர் வைத்திருக்கும் உம் மக்களிடமும் என் மகிழ்ச்சியைக் கண்டுப்பிடிக்கவும் அடியேனுடைய இதயத்திற்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து