இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எல்லாச் சுவர்களும் இடிந்து, எல்லாப் இராணுவ படைகளும் நொறுங்கி, நம்முடைய எல்லா நம்பிக்கையும் தொலைந்து போகும்போது நாம் எங்கே போவோம் ? நம்முடைய பிதாவாகிய நித்திய தேவனிடமே கிட்டிச் சேருவோம் . அவர் மிகவும் கடினமான காலங்களில் இஸ்ரவேலை பாதுகாத்தார், அப்படியாய் பரிசுத்த வேதாகமத்தை அழிக்க நினைத்தவர்களிடமிருந்து அவைகளை பாதுகாத்தார், மேலும் பல நூற்றாண்டுகளாக தனது திருச்சபையை பிரச்சனைகள் மற்றும் ஜெயங்களின் மூலமாய் வழிநடத்தினார். அவர் நம்மைத் தம்மிடம் அழைத்து சேர்க்கும் நாள்மட்டும் நம்மோடும் இன்னுமாய் அனைவரோடும் அவ்வாறே செய்வார்.

என்னுடைய ஜெபம்

என் கன்மலையும் , என் நம்பிக்கையும் என் பாதுகாவலருமானவரே, என் ஜீவனை காப்பாற்றியதற்காக உமக்கு நன்றி. என்னுடைய அழுகையின் கூக்குரலை கேட்டு உதவியதற்காகவும், குணப்படுத்தியதற்காகவும் உமக்கு நன்றி. ஆசீர்வாதமான வழிகளில் என் கால்களை வழிநடத்தியதற்காக உமக்கு நன்றி. தயவு கூர்ந்து தேவனே , என் வாழ்க்கையில் நான் அழுத்தங்களையும் சவால்களையும் எதிர்கொள்ளும்போது என் கரங்களை பிடித்து வழிநடத்தும் . உம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாய் , நான் வாழ்க்கையின் புயல் போன்ற போராட்டங்களுக்கு மத்தியிலே ​​அடியேன் வளரவும் இன்னுமாய் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவும் உதவுங்கள். என் இரட்சகரும் ஆண்டவருமான இயேசுவின் நாமத்தினாலே நான் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து