இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மற்றவர்களுக்கு மெய்யாக ஊழியஞ் செய்யும் கிறிஸ்துவுக்குள் உள்ள ஒரு நண்பர் புத்துணர்ச்சியின் அழகான ஈவைக் கொண்டுவருகிறார். இருப்பினும், மனிதர்களாகிய நாம், நிலையற்ற நண்பர்களாக இருக்க ஆசைப்படுகிறோம் - நாம் அவர்களுக்கு சிறிது காலம் தேவைப்படும் போது நம்மோடு இருக்கிறார்கள் , ஆனால் வியாதி , துக்கம் அல்லது முந்தைய பாவம் அல்லது பெலவீனம் அவைகளின் விளைவுகளினால் அநேக முறை சோர்வடைவதினால் வெகு காலத்திற்கு பிரிந்து போகிறோம் . உங்களுக்குத் தெரிந்த ஒருவர், கடந்த காலத்தில் ஏதோ ஒரு வகையில் விலங்கினால் பிணைக்கப்பட்டுள்ளாரா? அந்த நபரை இன்றோ, நாளையோ அல்லது நீண்ட காலமோ ஆசீர்வதிக்கும்படி கர்த்தர் உங்களை அழைக்கிறாரா? ஒநேசிப்போரு பவுலை ஆசீர்வதித்தது போல நீங்களும் மற்றவரை ஆசீர்வதிப்பது எப்படி - அநேகமுறையா , தொடர்ந்தா , வெட்கப்படாமலா ?

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் இரக்கமுள்ள மேய்ப்பரே, கிறிஸ்துவுக்குள் அக்கறையுள்ள சகோதரர் அல்லது சகோதரியின் அன்பின் மூலமாக மாத்திரமே அனுபவிக்கக்கூடிய,உம் கிருபையின் ஊக்கம் தேவைப்படும் என்னைச் சுற்றியுள்ள விலையேறப்பெற்ற மக்களை காண என் கண்களைக் திறந்தருளும் . நீர் நேசிக்கும் இந்த மக்களுக்கு புத்துணர்ச்சியின் மிகவும் உறுதியான மற்றும் உண்மையுள்ள ஆதாரமாக இருக்க உமது பரிசுத்த ஆவியின் வல்லமையின் கொண்டு எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில், இன்னும் விசுவாசமாகவும், சீராகவும் இருக்க உம்முடைய உதவியை நான் கேட்டு ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து