இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனின் அன்பு, பிரசன்னம், நெருக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது என்பது அவருக்கு ஊழியஞ் செய்யவும், அவருடனான உறவை பெலப்படுத்தவும் நம்மை வழிநடத்துகிறது. பல காரணங்களுக்காக நாம் தேவனை நேசித்தாலும், நம்மீது அவர் காட்டும் தனிப்பட்ட அக்கறைக்காக இன்று நம்முடைய அன்பை அவருக்கு வெளிப்படுத்த விரும்புகிறோம். அதிகாரமுள்ளவர்கள் தங்களுக்குக் கீழே உள்ளவர்களுடன் நேரத்தை செலவிட மறுக்கும் இவ்வுலகில், நம்முடைய ஒவ்வொரு மெல்லிய சத்தத்தையும் கேட்கும், நம்முடைய தனித்துவமான குரலை அடையாளம் கண்டு, நம் ஒவ்வொரு விண்ணப்பங்களையும் கேட்கத் தன் காதுகளைச் கூர்மையாய் வைத்திருக்கும் ஒப்பற்ற தேவனால் நாம் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். ஆம்! நான் அவரை நோக்கி ஜெபிப்பேன் , அவரைப் துதிப்பேன் , அவருக்கு நன்றி கூறுவேன், அவரிடம் அறிக்கையிடுவேன், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , என் தலையில் உள்ள ஒவ்வொரு மயிரையும், என் இருதயத்தில் உள்ள ஒவ்வொரு எண்ணத்தையும் நீர் அறிவீர். என் விண்ணப்பங்களைக் கேட்டதற்காக உமக்கு நன்றி. நான் விரும்பி உம்மிடம் கேட்ட பதிலையே எனக்கு உம்முடைய பிரதியுத்திரமாக கொடுத்தற்காக உமக்கு நன்றி. மற்ற விண்ணப்பங்களுக்கு விரைவில் பதில் வராத வேளைகளில் அல்லது நான் தயவாய் கேட்டு விரும்பும் முடிவை நீர் அருளாத வேளைகளில், அவைகளில் அடியேனுக்கு பொறுமையை தாரும் . என் சொந்த கண்களால் நான் பார்க்க முடியாவிட்டாலும் நீர் இருக்கிறீர், என் நன்மைக்காக நீர் உழைக்கிறீர் என்று நான் நம்புகிறேன். உம் மகிமைக்கும் எனது சிறந்த நன்மைக்கும் நீர் எப்போதும் பதில் செய்வீர் என்று நான் நம்புகிறேன். ஆனால் தயவு செய்து, அன்பான பிதாவே , என் விசுவாசத்தை பெலப்படுத்துங்கள், அதனால் நான் உம் மீது என் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் விடமாட்டேன். இயேசுவின் நாமத்தினாலே நான் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து