இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்களுடைய நோக்கம் என்ன? உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் எனது நோக்கம் "அமைதியாக வாழ்வது..." ( சில வேளைகளில், நான் கொஞ்சம் மூர்க்கத்தனமாக இருப்பேன், .) அப்போஸ்தலனாகிய பவுலின் அந்தக் கட்டளைக்கான காரணத்தை நான் கேட்கும்போது, ​​அதைக் கொடுத்ததின் நோக்கத்தை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது . நான் சந்திக்கும் பலர் தங்களின் வாழ்க்கை காரியங்கள் அலுவல்கள் நிறைந்திருப்பதால் , சோர்வுடனும், துவண்டும் மற்றும் பெலனற்று போய் இருக்கிறார்கள். நான் அப்படி வாழ விரும்பவில்லை அல்லது மற்றவர்கள் மீது, குறிப்பாக இயேசுவை அறியாதவர்களுக்காக என் வாழ்க்கையின் தாக்கத்தை செலவுசெய்து விரயம் செய்ய விரும்பவில்லை. என் வாழ்க்கையை கொஞ்சம் அமைதிப்படுத்தவும், ஒவ்வொரு நாளும் எனக்கு தேவையானவற்றிற்காக தேவனை அதிகமாக தேடவும், என்னைச் சுற்றியுள்ள மற்றவர்களின் மத்தியில் ஒரு மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழவும் நீர் என்னுடன் இணைந்து கொள்வீர் என்று நம்புகிறேன். நான் தேவனைத் தவிர வேறு யாரையும் சார்ந்திருக்க விரும்பவில்லை!

என்னுடைய ஜெபம்

விலையேறப்பெற்ற மற்றும் நீதியுள்ள பிதாவே , கட்டுப்பாட்டை மீறி மற்றும் நோக்கமின்றி ஓடுவதற்குப் பதிலாக, என் பொறுப்புகளை உணர்ந்து அமைதலாக செயல்பட எனக்கு உதவிச் செய்தருளும் . தயவு செய்து என்னைச் சுற்றியிருப்பவர்களை உம்மிடம் கிருபையுடன் அமைதியான வாழ்க்கையை வாழ எனக்கு ஞானத்தையும் பொறுமையையும் கொடுங்கள். இயேசுவின் நாமத்திலே , நான் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து