இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாங்கள் எங்கள் இலக்கை அடையவில்லை(பிலிப்பியர் 3) நம்முடைய மீட்பிற்காக தன் உயிரையே ஒப்புக் கொடுத்த, இயேசுகிறிஸ்து மகிமையோடு பிரசன்னமாகி மகிழ்வுடன் நம்மை அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம். நாம் காத்திருக்கும் இந் நேரத்திலே , எது சரியானதோ , எது நல்லதோ, எது பரிசுத்தமானதோ அதையே செய்ய ஆர்வமாக இருப்போம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே என்னை பரிசுத்தமாக்கும். பரிசுத்த ஆவியானவரே, எனக்குள் ஆவலை உண்டாக்கும் . இயேசுவே , என்னை மகிமைப்படுத்தும் . உமது மகிமைக்காகவும் , உம்மை இன்னும் நன்கு அறிய வேண்டியவர்களின் ஆசீர்வாதத்துக்காகவும் இவற்றைச் செய்வீராக . நான் அலட்சிய மனதுடனே இருந்த காலத்திற்காக என்னை தயவாய் மன்னித்து, உமக்கு உண்டான பரிசுத்த ஆர்வத்திற்கு என்னைத் தூண்டவும் கேட்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து