இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அன்பும், தாழ்மையான குணாதிசயமுமுள்ள வாழ்க்கை ஜீவியமே ஒருவரை மெய் ஞானியாக காண்பிக்கிறது . மக்கள் மூர்க்கமாக செயல்படுவது மிகவும் எளிதானது, ஆனால் தேவனின் பார்வையில் அவர்கள் பேதைகளை விட மோசமானவர்கள்; அவர்கள் அறியாமையிலுள்ளவர்கள். ஞானம் என்பது அறிவைப் பறைசாற்றுவது அல்ல, மாறாக பரிசுத்த வாழ்க்கை வாழ்வதாகும் . இயேசுவோடு நீங்கள் சேர்ந்து நடக்கும் போது எது உங்களுக்கு மிகவும் ஒத்திருக்கிறது - ஞானத்தை தாழ்மையான மற்றும் அன்பான ஜீவியம் மூலமாகவும் அல்லது மேட்டிமை மற்றும் மூர்க்கம் போன்ற உணர்வுகளுடன் புத்திசாலித்தனமாக வெளிப்படுத்தப்படுவதா ?

என்னுடைய ஜெபம்

அன்பான மேய்ப்பரே, நீர் எனக்கு ஞானமான மற்றும் அன்புள்ள பிதாவாக இருக்கிறீர் என்பதை நான் அறிவேன். நீர் என் மீது செலுத்திய அக்கறையை இன்று மிகவும் தேவைப்படும் நபருடன் பகிர்ந்து கொள்ள எனக்கு உதவுங்கள். மூர்க்கம் மற்றும் மேட்டிமையின் உணர்வுகளிலிருந்து என்னைப் பாதுகாத்து, உம் கரங்களில் என்னை மிகவும் பயனுள்ள கருவியாக மாற்றும் வழிகளில் சாந்தத்துடன் என்னைத் தாழ்த்த உதவிச் செய்யும் . இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து