இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

டீட்ரிச் போன்ஹோஃபர் என்ற ஜெர்மனியைச் சேர்ந்த போதகர் அவர் வாழ்ந்த காலத்தில் கிருபையானது தன் மதிப்பை இழந்துவிட்டது என்று கூறினார். அவர் இன்று வாழ்ந்திருப்பாரானால் என்ன கூறியிருப்பார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? நானும் கிருபைக்காக காத்திருக்கிறேன், ஆனால் அவை எவ்வளவு பெரிதான விலையைக் கொடுத்து வந்ததை எண்ணி நான் திகிலடைகிறேன் - இயேசுவானவரின் சிலுவை மரணம். இதைப் பெற்றுக் கொண்டோம் என்று அடிக்கடி கூறினாலும், இவ்வளவு மாபெரிதான விலையைக் கொடுத்து, இந்த கிருபையை நம்மிடம் கொண்டு வந்த இயேசுவுடைய எந்த விதமான குணாதிசயமும் இல்லாமல் இருப்பது எப்படி என்பதை என்னால் வாழ்நாள் முழுவதும் புரிந்து கொள்ள முடியவில்லை. சாமுவேல் மூலம் கொடுக்கப்பட்ட தேவனின் வார்த்தை பயங்கரமானது . ஆனாலும், இந்த வார்த்தையை நமது ஜெய கிருபையின் கீதங்களில் நாம் சேர்க்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் பார்க்கிறீர்கள், மெய்யான கிருபை நம்மை மறுரூபமாக்குகிறது . அது நம்மை கிருபையுள்ளவர்களாகவும், மேலும் அந்த கிருபை பகிர்ந்துகொடுப்பவர்களாகவும் மாற்றும் . இல்லையெனில், நாம் கிருபையை வலிமையற்றது, சக்தியற்றது மற்றும் பொய்யானது என்று சொல்லுவோம் . பவுலானவர் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு (2 தீமோத்தேயு 3:5) என்ற வசனத்தில் கூறியுள்ளார். அவருடைய நீதியான குணத்திலும், கிருபையுள்ள இரக்கத்திலும், அன்பு சார்ந்த நீதி ஆகிய காரியங்களில் இயேசுவை போல மாறும்படி கிருபையானது நம்மை வழிநடத்துகிறது . (பிலிப்பியர் 2:1-8) (லூக்கா 6:40; கொலோசெயர் 1:28-29) . திருச்சபையின் நல்லொழுக்கங்களுக்கு கீழ்ப்படிந்து திரும்புவோம், அதை நமது முன்னோர்களின் பாரம்பரியத்திலிருந்து மீட்போம், மற்றும் நம் வாழ்கையானது தேவனின் வழிக்கு எதிராய் இருக்கிறது என்பது , நம்முடைய கீழ்ப்படியாமையால் காண்பிக்கப்படுகிறது (மத்தேயு 7:12-29).

என்னுடைய ஜெபம்

பிதாவே , என் பாவத்தினால் நீர் ஏமாற்றமடைந்துள்ளீர் என்பதை நான் அறிவேன், ஆயினும் உம் கிருபை என் மேல் ஊற்றப்பட்டு அது என்னை மூடுகிறது. பிதாவே , நான் ஒருபோதும் அந்த கிருபையை பற்றி கற்பனை செய்யவோ அல்லது அதை என் பாவம் மற்றும் கீழ்ப்படியாமையால் அதை மலிவாகக் கருதவோ விரும்பவில்லை. எனது பாத்திரத்தின் ஆழமான போராட்டங்கள் மற்றும் நான் "கொஞ்சமாக விட்டுவிட" விரும்பும் விஷயங்களை நீர் அறிவீர். ஆகவே, தயவு செய்து, பரிசுத்த ஆவியானவரின் மூலமாக என்னில் உமது பரிபூரணத்தை உண்டாக்கி, என் இரட்சகராகிய இயேசுவைப் போலவே அடியேனையும் மாற்றியருளும், அவருடைய நாமத்தின் மூலமாக ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து