இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கொடுமையான காலங்களிலும் மற்றும் பேரழிவு நேரங்களிலும் , ஜனங்கள் எப்பொழுதும் போலவே ,"இந்த போராட்டங்களிலன் மத்தியில் தேவன் எங்கே ?" என்று கேட்கின்றனர். மெய்யாகவே , நாம் அநேக வேளைகளில் தேவனை நம் வாழ்வின் ஒரு ஓரத்தில் புறக்கணித்து விட்டுவிட்டு, நமக்கு மிகவும் தேவையுள்ள நேரங்களிலும் மற்றும் வேறு வழிகள் இல்லாதபோது மாத்திரமே நாம் அவரைத் தேடி அலைகிறோம். அவருடைய சத்தியத்துக்கு எதிர்த்துநின்றும் , புறக்கணித்தும் , நம் வாழ்க்கையை நாமே குழப்பம் நிறைந்ததாக மாற்றுகிறோம், பிறகு அவர் நம்மை அந்த பிரச்சனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதே நேரத்தில், தேவன் நம் வாழ்வில் அவருடைய ஆசீர்வாதங்களை ஊற்றும்போது, ​​அவருடைய மிகுந்த கிருபைக்காக நன்றி சொல்ல மறந்துவிடுகிறோம். காரியங்கள் நன்மையாக சென்றுகொண்டிருக்கும் போது, ​​"இதில் எல்லாம் தேவன் எங்கே இருக்கிறார்?" என்று சொல்லத் தவறுகிறோம் . அவர் நம்மை ஆசீர்வதிக்க நம்மோடு இருக்கிறார்! அவர் செய்த சகல நன்மைக்காக அவரை ஸ்தோத்திரிப்போம் ! வாழ்வு காலத்திலும் இன்னுமாய் தாழ்வு காலத்திலும் எப்பொழுதும் அவரிடமாய் திரும்பி அவரைத் தேடும்படி தேவன் நம்மிடம் உரைக்கிறார். அப்படி தேடும்போழுது நாம் அவரைக் கண்டுபிடிப்பது மாத்திரமல்ல , அவர் நம்மிடமாய் திரும்பி , நம்முடனே சஞ்சரிப்பார் .

என்னுடைய ஜெபம்

தேவனே , நாங்கள் சுயமாக எங்கள் வழியைத் தேடுவதற்காக எங்களை மன்னியுங்கள். நாங்கள் அடிக்கடி உம் வழிகளிலிருந்து விலகி திரிகிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். பரிசுத்த வேதாகமம் எங்களுக்கு எளிதாகக் கிடைத்தாலும், உம் பரிசுத்த வேதத்திலிருந்து நீர் பேசுவதைக் கேட்கும் வாய்ப்பை நாங்கள் அநேக வேளைகளில் வீணாக்குகிறோம். உம்மைப் போற்றி ஜெபிக்க எங்களுக்கு பல வாய்ப்புகள் இருந்தாலும், பல சமயங்களில் நாங்கள் தீர்க்க முடியாத பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் போது மாத்திரமே நீர் எங்களிடமிருந்து விண்ணப்பங்களை கேட்கிறீர். பிதாவே , உம்முடனான எனது உறவை நழுவ விட்டுவிட்டேன் என்றும், என்னால் இயன்றபோதும் உம் பிரசன்னத்தை என் வாழ்க்கையில் எப்பொழுதும் தேடவில்லை என்றும் முழு மனதோடு ஒப்புக்கொள்கிறேன். தினமும் நாங்கள் உம்மையும் உம் சமூகத்தை தேடும்போது அடியேனோடும் மற்ற யாவரோடும் இருப்பீராக ! இயேசுவின் வல்லமை பொருந்திய நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து