இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

காலங்கள் மாறும்போது, ​​​​இலைகள் உதிர்ந்து, புல் உலர்ந்து போகிறது , அவைகள் ​​​​நம் வாழ்க்கை எவ்வளவு குறுகியது என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவுபடுத்துகிறது . தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், நமது ஆழமான தேவைகள் வேதத்தில் உள்ள நித்திய மற்றும் ஜீவனுள்ள தேவனுடைய சித்தத்தால் மட்டுமே தீர்க்கப்படுகின்றன. உங்கள் கைபேசி(மொபைல் ) செயலியிலுள்ள வேதாகமத்திலிருந்தோ அல்லது பழைய குடும்ப வேதாகமத்திலிருந்தோ உங்கள் வேதத்தை நீங்கள் பெற்றாலும், இன்றே அதை எடுத்து பயன்படுத்தவும் . இந்த நாளுக்குரிய நித்தியத்திற்கான கருத்தை நீங்கள் வாசித்து பெற்றுக்கொள்ள வேண்டாமா?

என்னுடைய ஜெபம்

நான் வயது சென்றவனாகும் போது, ​​தேவனே , குறுகிய காலம் இப்பூமியில் நான் தங்கியிருப்பதையும், பரலோகத்தில் உமது நித்திய ஆட்சியையும் நான் தொடர்ந்து நினைவுபடுத்துக் கொள்கிறேன். உமது வார்த்தையில் உமது சித்தத்தை நான் தேடும் போது, ​​உமக்கு முன்பாக எனக்குரிய இடத்தை எனக்கு உணர்த்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து

Important Announcement! Soon posting comments below will be done using Disqus (not facebook). — Learn More About This Change