இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

விலக்கப்பட்டது. நிராகரிக்கப்பட்டது. தூக்கி எறியப்பட்டது. கைவிடப்பட்டது. மறந்துவிட்டது. ஒதுக்கித் தள்ளியது. எடுக்கப்படவில்லை. இவை ஒவ்வொன்றும் நாம் ஒன்றுக்கும் உதவாதவர்களென்று என்ற உணர்வின் ஒரு அம்சத்தை விவரிக்கிறது. சாத்தான் நம் பாவ சரீரத்திலிருந்து நம்மை நாமே குற்றப்படுத்திக்கொள்ளும் வார்த்தைகளை பேசுவதற்கான வாய்ப்புகளையும் கொடுக்கிறான். இருப்பினும், தேவன் தமது இரக்கத்தையும், கிருபையையும் நமக்கு இன்னும் அதிகமாய் கொடுக்கிறார் . "ஆனால் இப்போது ..." - வேதகாமத்தில் உள்ள இரண்டு பெரிய வார்த்தைகள் - தேவன் கிறிஸ்துவின் மூலம் நம்மில் அன்பு கூர்ந்தார் , மேலும் நம்மை அவருடைய சபையாகிய குடும்பத்திற்குள் கொண்டு வந்து ஒரு நோக்கத்தைக் கொடுத்தார். நாம் இப்போது தேவனின் ஜனங்களில் ஒரு பகுதியாக இருக்கிறோம்! ஜெய குடும்பத்தில் நாம் ஒரு அங்கத்தினராக தேர்வு செய்யப்பட்டுள்ளோம். நாம் இரக்கத்தை பெற்றோம்! கிருபை நம்மைக் கழுவி சுத்திகரித்து , தேவனுடைய அன்பு நம்மை அவருடைய குடும்பத்தில் ஏற்றுக்கொண்டது. முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள் என்று பாவத்திலிருந்து மீட்கப்பட்ட மற்றும் துன்புறுத்தப்பட்ட ஜனங்களுக்கு பேதுரு இவைகளை நினைப்பூட்டுகிறார். மெய்யாகவே , பேதுருவின் வார்த்தைகள் நம் இருதயத்தில் பேசுகின்றன. நீங்கள் இயேசுவின் அன்பான நண்பர் , தேவனின் பிள்ளை. மோசே , எஸ்தர், பவுல் மற்றும் மகதலேனா மரியாள் போன்ற அவரது நித்திய மற்றும் ஜெயம் பெற்ற ஜனங்களின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்கிறீர்கள். இரக்கமானது பாவம் மற்றும் தோல்வியின் பிடியிலிருந்து மாற்றியமைத்து, பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தால் அதிகாரம் பெற்ற இடத்தில் கிருபையை வைத்துள்ளது. எனவே நீங்கள் ஒரு காலத்தில் "இருந்தது" போல இன்று வாழாதீர்கள்: நீங்கள் இயேசுவில் இருப்பது போல், இயேசுவுக்காக இன்று வாழுங்கள்!

என்னுடைய ஜெபம்

இரக்கத்தின் பிதாவே , கிருபையின் தேவனே , உமது பிள்ளையாக , உமது ஜனங்களில் ஒரு பகுதியாக , மற்றும் என்னைச் சுற்றியுள்ள உலகில் ஒரு நோக்கத்துடன் என்னைப் புதுப்பித்த உமது நோக்கத்திற்காக உமக்கு நன்றி . சாத்தானின் விளக்கத்தை அல்ல, என்னைப் பற்றிய உம் விளக்கத்தைக் கேட்க எனக்கு உதவுங்கள். தயவு செய்து உம்முடைய வார்த்தைகளால் என் அடையாளத்தை வரையறுக்க எனக்கு உதவுங்கள், மாறாக என் சுய கண்டனத்தின் வார்த்தைகளினால் அல்ல. இப்பொழுதும் நான் யார் என்பதற்காகவும், முன்னே நான் இருந்த காரியங்களுக்கு இனி நான் ஒருபோதும் கட்டுப்பட வேண்டியதில்லை என்பதற்காகவும் உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து