இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் வாழ்க்கையைப் பார்ப்பதற்கான ஒரு வழி, அவற்றைக் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது தான். இருப்பினும், எதிர்பார்ப்பு இல்லாமல் நீண்ட காத்திருப்பு வெறுப்பாக இருக்கிறது மற்றும் சில சமயங்களில் நேரத்தை வீணடிப்பதாக தோன்றும் அது கசப்பான கோபத்தை வளர்க்கிறது. நாம் நீண்டகாலமாக அல்லது குறுகிய காலமாக இயேசுவைப் பின்பற்றுபவர்களாக, நம் ஜீவியத்தில் எதிர்பார்த்துக்கொண்டு காத்திருக்கிறோம். எங்களின் எதிர்பார்ப்பு , நம்முடைய "ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கை" வர எதிர்நோக்கிக் காத்துகொண்டிருக்கிறோம் . இந்த நம்பிக்கை இயேசுவுக்குள்ளாய் வாக்குத்தத்தத்தில் வேரூன்றியுள்ளது. ஆனால் அவர் திரும்பி வருவதை விட, நம்முடைய இரட்சகர் மகிமையான தோற்றத்தில் நம்மை மறுபடியுமாய் பிதாவினிடம் அழைத்துச் செல்வதற்கும், நம் முன்னோர்களாகிய பரிசுத்தவான்கள் மற்றும் சமீபத்திலே நம்மை விட்டு பிரிந்த அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைவதற்கும் நமது நம்பிக்கை வேரூன்றியுள்ளது. அந்நாளில், இயேசுவே நம் ஆண்டவர் என்ற நம்பிக்கை உறுதிப்படுத்தப்படும், மேலும் நமது உயர்ந்த எதிர்பார்ப்புகள் நனவாகும்.

என்னுடைய ஜெபம்

மகிமையும் சத்தியமுள்ள தேவனே , என் பாவங்களிலிருந்து என்னை மீட்டுக்கொள்ள முதல் முறையாக இயேசுவானவரை அனுப்பியதற்காக உமக்கு நன்றி. அவர் மறுபடியுமாய் திரும்பி வரும்போது எதிர்காலத்தில் உம்மோடு நான் வாழ்வது போல இப்போதும் வெற்றியுடன் வாழ்வதற்காக அவருடைய மகிமையின் வருகைக்காக நான் காத்திருக்கும்போது தயவுக்கூர்ந்து என்னை பெலப்படுத்துங்கள். இயேசுவின் நல்ல நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து