இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அந்நியர்களின் திரக்கப்பட்ட கல்லறைகளுக்கு மேலே நின்று, மரணத்தின் முடிவு நிலையையும் மற்றும் நம் மனிதனின் பலவீனத்தின் தோற்றத்தையும் அதின் உணர்வையும் நான் அறிந்து கொள்வேன் . ஆனால் கிறிஸ்துவின் மரணமானது , மரணத்தின் நம் கண்ணோட்டத்தையும், விசுவாசத்தையும் சார்ந்த விஷயம் நமக்கு மாபெரிதான நினைப்பூட்டலாயிருக்கிறது . தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்றும் மற்றும் நம்மெல்லோரிலும் முதல் பலன் இயேசுவே, அவரையே நான் விசுவாசிக்கிறேன். அவர் ஜீவிக்கிறார், ஆவியில் மாத்திரமல்ல , சரீரத்திலும் ஜீவனுடன் இருக்கிறார். இயேசு ஜீவிப்பதால் நாமும் ஜீவிப்போம் !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, உமது கிருபை , ஆவி, மன்னிப்பு மற்றும் ஜீவனின் ஈவுகளுக்காக உமக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக, உமது இரட்சிப்பின் மூலம் என்னில் ஜீவனையும், நித்தியத்தையும் கொண்டு வந்த உமது குமாரனின் ஈவுக்காக நன்றி. எனக்கு மரிப்பதில் பெரிய விருப்பம் இல்லை என்றாலும், நான் மரணத்தின் மூலம் உம்மையும், இயேசுவின் மூலம் என்னில் உம் ஜெயத்தையும் பார்க்க முடியும் என்று எனக்குத் தெரியும். நீர் என்னை உம் நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வரை ஒவ்வொரு நாளும் உமக்காக வாழ எனக்கு தைரியம் தாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து