இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மற்ற அனைத்து கடவுள்களும் பொய்யான, சோர்வான மற்றும் ஒரே மெய்யான ஜீவனுள்ள தேவனின் மங்கிப்போன நிழலுக்கு ஒப்பாயிருக்கிறது . எல்-ஷடாய்- —- சர்வவல்லமையுள்ள தேவன் , உடன்படிக்கையின் தேவனாகிய (யாவே) மாத்திரமே நம் புகழுக்கு தகுதியானவர். நம்முடைய பாவங்களுக்கு நிவாரண பலியின் ஈவாக இயேசுவை கொடுத்தற்காகவும் , நம்முடைய தவறுகளைச் சரிசெய்வதற்கு அவருடைய கிருபையின் ஈவுக்காகவும் , நம்முடைய முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய உதவும் பொறுமையின் ஈவுக்காகவும், இறுதியாக நமக்கு இரட்சிப்பை வழங்கிய அவருடைய அன்பிற்காகவும் ஜீவனுக்காகவும் அவரை போற்றுவோம் . .

என்னுடைய ஜெபம்

மெய்யான ஜீவனுள்ள தேவனே , உம்முடைய மகிமை உம் பிள்ளைகளின் வாழ்க்கையில் என்றென்றும் பிரகாசிக்கட்டும், மேலும் உம்முடைய நீதியுள்ள குணம், கிருபையின் இரக்கம் மற்றும் மெய்யான அன்பின் கிருபை ஆகியவற்றில் அவர்களின் உண்மைத்தன்மையில் பிரதிபலிக்கட்டும். உம்முடைய கீர்த்தி எப்பொழுதும் எங்கள் உதடுகளிலும் இருதயங்களிலும் இருக்கட்டும். மக்கள் உம் அன்பை எங்கள் வாழ்வில் இப்போதும் என்றென்றும் காணட்டும் . இயேசுவின் நாமத்தின் மூலமாய் , மகிமையான கனமும் , உண்மையுள்ள அன்பும் உம்முடையதே என்று கூறி ஸ்தோத்தரிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து