இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சமாதானம் - வாழ்வின் அனைத்து நலன்களையும் உள்ளடக்கிய கிருபையின் அறிந்துகொள்ள முடியாத நிலையாகும் . இயேசுவினாலே , நமக்கு மெய்யான சமாதானம் உண்டானது - ஆவி ஆத்துமா, சரீரம் ஆகிய எல்லாவற்றிலும் நமக்கு ஆரோக்கியமாய் இருப்பதாகும். மற்றவர்களுடனான அவருடனான ( இயேசு )உறவு,பாவம், மரணம் மற்றும் கல்லறை ஆகியவற்றின் மீதான அவரது வெற்றி, நாமும் சமாதானத்தை பெறுவதை உறுதி செய்கிறது! ஆகவே, கிறிஸ்துவின் ஆவியை நாம் நம் இருதயங்களில் பெறும்போது, ​​​​எவ்வளவு முழுமையான சமாதானம் இல்லாத நிலையில் இருந்தாலும், நம் சகோதர சகோதரிகளுடன் நம்மால் வாழ முடியும். தவிர, பவுல் நம்மிடையே உவமையினால் பேசுவதால் , நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கமாக இருக்கிறோம் அதினாலே அந்த சரீரம் தன் சொந்த சரீரத்துடன் போரிட விரும்பவில்லை. எனவே யாவரோடும் சமாதானமாக வாழுங்கள், அதை ஸ்தோத்திரத்தோடே செய்யுங்கள்.

என்னுடைய ஜெபம்

எல்லா விசுவாசிகளையும் ஆசீர்வதிக்கிற பிதாவே , தயவுக்கூர்ந்து உம் சொந்த ஜனங்களை நேசிக்க எனக்கு நல் இருதயத்தை தாரும் . இயேசுவின் குணாதிசயம் என் வாழ்க்கையில் பிணைந்து இருப்பதை நான் அறிவேன், உம் ஒவ்வொரு பிள்ளைகளின் மேன்மையான தன்மையையும் நான் அதிகம் பாராட்டுவேன், மேலும் கடினமான குடும்ப உறுப்பினர்களோடு நான் பொறுமையோடு வாழ்வதினால் நீர் அடியேனை பொன்னாக விளங்கச்செய்வீர் . உம் பிள்ளைகள் அனைவரையும் நேசிப்பதற்கான என் இருதயம் முழுமையாக ஒப்புக்கொடுக்கும் வரை நீர் உம் கிருபையை கொண்டு என்னை தாங்கவேண்டும் என்று கேட்கிறேன் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து