இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கர்த்தரை அன்புகூருங்கள்! கர்த்தர்மேல் உள்ள உங்கள் நம்பிக்கையினால் திடமனதாயிருங்கள். மாறாக கூற வேண்டுமென்றால் உங்களுடைய பெலன் எங்கே என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள். உங்கள் கிருபையின் ஊற்றை அங்கீகரியுங்கள் . அவருடைய பரிசுத்த ஆவியின் மூலமாய் நம்மீது பொழியப்பட்ட அவருடைய ஏராளமான இரக்கத்திற்காகவும் வல்லமைக்காகவும் அவரை ஸ்தோத்தரியுங்கள். கர்த்தராகிய ஆண்டவர் தம் ஜனங்களை பாதுகாக்கிறார். இவ்வுலகில் பரியாசம் பண்ணப்பட்டாலும் உண்மையானவனுக்கு கனத்தை கொடுக்கிறார் . கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதிப்பார். இன்னுமாய் இவர்களை பரியாசம் பண்ணுகிறவர்களையும் , கடிந்துக்கொள்ளுகிறவர்களையும் நியாயத்துடன் நடத்துவார்.

என்னுடைய ஜெபம்

கர்த்தாவே, சோதனை நேரங்களில் என்னுடைய வாசற்படியில் உள்ள பகைஞர்களையும், எல்லா பக்கங்களிலிருந்தும் வரும் எதிராளிகளையும் எதிர்கொள்ள எனக்கு பெலன்தாரும். என்னை வழிநடத்துகிறதான உம்முடைய கிருபையை பார்க்கும்படியான ஞானத்தை தாரும். உண்மை, உன்னதம், பரிசுத்தம், போன்ற காரியங்களுக்காக நிற்க அடியேனுக்கு தைரியத்தை தாரும். உம்முடைய மகிமைக்காக நீர் என்னைப் பயன்படுத்த விரும்பும் விஷயங்களைக் காண எனக்கு தரிசனம் கொடுங்கள். என்னுள் உமது கிரியை நிறைவேறும் வரை நான் காத்திருக்கும் வேளையில் என் நம்பிக்கையை உறுதியாய் பற்றிக்கொள்ள தயவாய் உதவியருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து