இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய ராஜ்யத்திற்குள்ளாய் அவருடைய ஜெயத்தையும், மகிமையுள்ள வெற்றியையும் பெற்றுக்கொள்ளுகிறோம் . தேவதூதர்களுடனும், வேதத்தில்லுள்ள எல்லா பரிசுத்தவான்களோடே சேர்ந்து, நம்முடைய பிதாவுடனே நித்தியகாலமாய் ஜெய ஜீவியத்தை , முடிவில்லாத மகிழ்ச்சியோடே வாழ்வோம். ஆனால் இயேசுவானவர் மறுபடியுமாய் வரும்போது இந்த ராஜ்யம் தொடங்குவதில்லை. இந்த ராஜ்யம் இப்போதும் அவருடைய சபையிலே முன்னமே தொடங்கிவிட்டது , அவருடைய சொந்த ஜனங்கள் , தேவனுடைய சித்தத்தை அறிந்து அதை மதித்து அதற்கு கீழ்ப்படிந்து நடப்பார்கள் . ஆகவே, இஸ்ரவேலின் பரிசுத்தமான தேவன் நம்மை மீட்டு, இயேசுவுக்குள்ளாக தமக்கென்று பரிசுத்தமான ஜனங்களாக மாற்றும்படி தேவன் தம்மை தாழ்த்தினார் என்ற பிரமிப்பினால் நம் தொழுகை நிறைந்திருக்க வேண்டும். இன்னுமாய் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியுடனும், ஸ்தோத்திரத்துடனும், பிரம்மிப்புடனும் பயத்தோடும் அவரை தொழுதுக்கொள்ளுவதை தவிர வேறு என்ன நம்மால் செய்ய முடியும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, எல்லாம் உம்முடையது. உம்முடைய ஆசீர்வாதங்களையும், வாக்குத்தத்தங்களையும், நம்பிக்கையையும், ஜெயத்தையும் இயேசுவுக்குள்ளாய் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்காக உமக்கு கோடான கோடி நன்றி. உம்முடைய மகிமையானஅசைவில்லாத ராஜ்யத்தையும் உலகத்தின் முடிவில் உண்டாகும் வெற்றியிலே பங்கடைய வருவதற்கு, என் நம்பிக்கையற்ற நண்பர்கள் மற்றும் என் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக, மிகவும் நன்றியுள்ள, ஜெய வாழ்க்கையை வாழ எனக்கு உதவுங்கள். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து