இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பாடுபடுதல்! கிறிஸ்துவினிமித்தமாகப் பாடுபடுவது நமக்கு அருளப்பட்டிருக்கிற பாக்கியம். முதல் நூற்றாண்டு அப்போஸ்தலர்கள் (கிறிஸ்துவுடைய ) அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், எப்படி மகிழ்ச்சியடைந்தார்கள் என்பதை நினைவில் கொள்வோம் ( அப்போஸ்தலர் 5:41). அவர் நமக்காக பாடுகளை சகித்தார் , அதனால் நாம் இரட்சிக்கப்படுகிறோம் . கிறிஸ்துவுக்காகவும் அவருடைய ராஜ்யத்திற்காகவும் நாம் பாடுகளை எதிர்கொள்ளும்போது,​​ பாடுகளின் மத்தியில் உண்மையாக வாழ மற்றவர்களை ஊக்குவிக்கவும், நமது விசுவாசத்தின் உண்மையான தன்மையை அனைவருக்கும் காட்டவும் உதவுகிறோம். மிகச் சிலருக்கு அவர் நிமித்தமாகப் வாழ்வதற்கு , மரிப்பதற்கு அல்லது பாடுபடுவதற்கு அருளப்பட்டிருக்கிறது. இம்மூன்றிற்கும் நமக்குக் காரணம் இருக்கிறது: நம் ஜீவன் இயேசுவுக்குள்ளாக பிணைக்கப்பட்டுள்ளது. (ரோமர். 8:32-39; 1 கொரி. 15)

என்னுடைய ஜெபம்

என்னை தைரியப்படுத்துங்கள் , தேவனே ! துன்பமான காலங்களில் உண்மையுள்ளவராகவும், உபத்திரவம் , கஷ்டங்கள் மற்றும் பாடுகளின் காலங்களில் வலுவாகவும் இருக்க எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து